கதை கேளு
மனித உடல்
ஒரு பெரியவர், சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர். அவர் வாழ்நாளில் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு செய்த செய்த பாவங்கள், துரோகங்கள், தீமைகளை எண்ணி வருந்தி, இதை போக்க கோயில்களுக்கு செல்லலாம் என முடிவெடுத்து அனைத்து வகையான பெரிய கோயில்களுக்கு பயணிக்கிறார். அங்குள்ள புனித குளங்களில் நீராடுகிறார். ஆனால் அவர் மனம் திருப்திப் படவில்லை. இப்படி ஒரு நாளில் கோவிலில் தனது பால்ய நண்பனை சந்திக்கிறார், அவரிடம் நடந்த அனைத்தையும் எடுத்துரைக்கிறார்.
மேலும் தான் செய்த தவறுகளை வருந்தி, இந்த உடம்பில் உள்ள அழுக்கு எத்தனை புனித குளத்தில் மற்றும் ஆறுகளில் நீராடினாலும் போகவில்லை. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை? என புலம்பித் தள்ளுகிறார்.
அதற்கு அவருடைய நண்பர் சற்று அமைதியாக இரு, நீ புலம்பினாலும் செய்த பாவங்களை மாற்றலாது. உனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன் .
நீ பேனாவை பற்றி என்ன நினைக்கிறாய்?
அதற்கு அந்த பெரியவர் நண்பனிடம், பேனா ஒரு எழுதுகோல், அதை வைத்து யாரை வேண்டுமானாலும் பெரிய ஆளாக புகழ்ந்து எழுதலாம் அல்லது இகழ்ந்து எழுதலாம், அவரது மதிப்பை குறைக்கலாம். நாவல்கள் கட்டுரைகள் கவிதைகளை படைக்கலாம். கையெழுத்துப் போட பயன்படுத்தலாம் உபயோகிக்காமல் சும்மாவும் வைத்துக்கொள்ளலாம். பேனா எழுத்துக்களுக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது.
நண்பர் உடனே பரவாயில்லை பேனாவை நன்கு புரிந்து வைத்துள்ளாய், ஆனால் மனித உடலை தான் உன்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.
பேனாவும் மனித உடலும் ஒரே மாதிரிதான். அது எண்ணங்களின் இயக்க கருவி, பேனாவை மையை விட அதை எழுதுவார்களின் எண்ணங்களின் சக்தி தான், அதனால் பேனாவை நல்லதை எழுதவும் பயன்படுத்த முடியும், தீமைகளை எழுதவும் பயன்படுத்த முடியும். அது இயக்குபவர்களின் எண்ணங்களைப் பொறுத்து .
அது போல மனித உடல் என்பது அந்தந்த நபர்களின் எண்ணங்களுக்கு தகுந்தவாறு இயங்கும்.
உதாரணத்திற்கு “உள்ள இருக்கிறதுதான் வார்த்தயா வெளிய வரும்” ன்னு சிலர் சொல்றத கேட்டிருப்போம். அதன் அர்த்தம் என்னவென்றால் நம் மனதில் அந்த நபரை பற்றியோ அல்லது அந்த சூழ்நிலையை பற்றியோ உள்ள எண்ணங்கள் வார்த்தையாக சட்டென்று வெளிவந்து விடும். அதனாலேயே நம் பெரியோர் நமக்கு நல்லனவற்றை மட்டுமே நம் நினைக்க வேண்டும் என அறிவுறுத்துவார்
மனம், நீ எங்கு சென்றாலும் உன் மனமே, இடம் மாறுமே தவிர மனம் தானாக மாறாது. நீ தான் மனதை நல்ல எண்ணங்களால் நிரப்ப வேண்டும்.
உன் மனதில் தேங்கியுள்ள தேவையற்ற வீணான எண்ணங்களை விலக்க வேண்டும்.. எண்ணங்களை நல்வழிப்படுத்தினால் உன் உடல் தானாகவே சுத்தமாக மாறிவிடும். பாவங்களை நீக்க, உன் உடம்பை புனித நீர்நிலைகளில் நீராடி கழுவ வேண்டியதில்லை.
தன் செயல்கலால் விளைந்த நன்மை தீமையை என்று உன் மனம் நினைத்ததோ அந்த நிமிடமே உன் மனம் பக்குவ நிலைக்கு மாறிவருகிறது, ஆகையால்இனி இருக்கும் வாழ்நாளை நல்லதாக பயன்படுத்து மற்றும் உன்னை சுற்றி உள்ளவர்களுக்கு முடிந்தவரை உதவிடு.
கதை கருத்து
உடலா (அ ) எண்ணங்களா என்று பார்க்கும்போது, எண்ணங்கள் தான் உடலை இயக்குகிறது. நாம் செய்யும் அனைத்து செயல்களும் எண்ணங்களின் வெளிப்பாடு, எண்ணங்களை செவ்வனே நற்செயலுக்கு பயன்படுத்துங்கள். பாவத்தை புனித நீர் நிலைகளுக்கு போக்க தேவையில்லை சற்று நிதானித்து மனதை சுத்தப்படுத்தினாலே போதும்.