கதை கேளு — மருந்து
அதிகாலையில் தனது வீட்டு குட்டி நாயுடன் குமார் என்ற நபர் நடை பயணம் சென்றார். தனது வீட்டை தாண்டி சிறு தொலைவில் இரு சக்கர வாகனம் குமாரின் மீது மோதியது. இதில் குமாருக்கும், நாய்க்கும் அடி பட்டது.
உடனடியாக குமாரின் வீட்டில் இருந்தவர்கள் அங்கு வந்தவர்கள் குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குட்டி நாய் அடிபட்ட காலுடன்வீட்டிற்க்கு திரும்பி சென்றது. அங்கு தனது தாயிடம் நடந்ததை சொன்னது. தாய் நாய் குட்டி நாயை அரவணைத்து கொண்டது. குட்டி நாய் சற்று நேரத்தில் தூங்கியது.
சில மணி நேரம் கழித்து குமார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார், கையில் சிறு கட்டு. அவரை மருத்துவர் ஒய்வு எடுக்க அறிவுருத்தினர்.
குமார் தனது குட்டி நாயை பார்த்து எப்படி இருக்கிறாய் என்று கேட்க! குட்டி நாய் நல்ல இருக்கேன் ஐயா, உங்களுக்கு இப்ப வலி பரவாயில்லையா என்றது.
குமார் இன்னும் வலி இருக்கிறது , மருத்துவர் 15 நாட்களுக்கு மருந்து தந்திருக்கிறார், அடுத்த பரிசோதனையில் தான் தெரியும். நீ பரவாயில்லை 2 நாட்களில் சரியாகிவிட்டாய், என்னை பார் என்றார்.
உடனே பெரிய நாய் , என்னமோ மருத்துவமனைக்கு செல்லாமலிருந்தால் நீங்கள் கூட 2 நாட்களில் சரியாகி விட்டிருப்பீர்கள்.
என்ன உளறுகிறாய் ? எப்படி முடியும் மருந்து சாப்பிடாமல்?
நீங்க சாப்பிடுவது மருந்தா! யார் சொன்னது? ரசாயன கலவை. அது உங்கள் உடம்பில் வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணுவது.
குமார் கோபமாக அப்ப எதைத்தான் மருந்து என்று சொல்கிறாய் ?
உணவே மருந்து அதை விட்டு விட்டு மாத்திரைகளை உணவாகிவிட்டீர்கள். இயற்கையே மருந்து.
அனைத்து நோய்களுக்கும் உணவில் மருந்து இருக்கிறதா ?
ஏன் இல்லை, அனைத்திற்கும் மருந்து உண்டு, ஆனால் அதை கண்டு பிடிப்பதுதான் அரிது.மருந்து என்பது ஊசி,மாத்திரை,சிரப் டானிக் மட்டும் அல்ல. இயற்கை , உடற்பயிற்சி, விரதம் , தூக்கம் , சிரிப்பு , தியானம் , நல்ல நண்பர்கள் , குடும்பம் . சொல்லி கொண்டே போகலாம்.
எதற்கெடுத்தாலும் மருத்துவமனை ஓடுவதற்கு பதிலாக, மருத்துவமனை செல்லாமலிருக்க உங்களை தயார் படுத்துங்கள். ரசாயன மருந்து மாத்திரைகள் மட்டும் தீர்வல்ல உங்கள் நோய்களை குணப்படுத்த. உங்களுடைய நடவடிக்கைகளும் கூட.. ரசாயன மருந்துகளை உட்கொள்வதில் பக்க விளைவுகள் நிறைய உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.
கதை கருத்து :
உண்மையான மருந்தை அறியுங்கள். மூலிகை மருந்து , வீட்டு மருந்து ( பாட்டி வைத்தியம் ) என பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் உண்டு. நல்ல உணவை உட்கொள்ளுங்கள். நம் மண்ணின் உணவு நமக்கு பலம்.
ரசாயன மருந்து வியாபார வலையில் சிக்காதீர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! வருமுன் காப்போம்.