கதை கேளு — முதலீடு
12ம் வகுப்பு தேர்வு முடிவு வந்திருந்த நேரம், நந்தா அவனின் அப்பாவிடம் சென்று நான் கல்லூரி சேர்ந்து படிக்க போவதில்லை. எனக்காக நீங்கள் கல்லூரிக்கு செலவு செய்யும் தொகையை என்னிடம் தாருங்கள். நான் என் வாழ்க்கையை பார்த்து கொள்கிறேன். வருங்காலங்களில் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன், நம் குடும்பத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்வேன். நமது வாழ்வாதாரம் சில மாதங்களில் உயரும்.
நந்தாவின் தந்தைக்கு தன் மகன் முதலில் கூறிய விஷயங்களில் ஆச்சர்யம். கடைசியாக சொன்ன வார்த்தையில் (சில மாதங்களில்) அதிர்ச்சி பயம், இருந்தாலும் பரவாயில்லை அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தெளிவு படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்து. தம்பி உன் விருப்பமே என் விருப்பம் ஆனால் நீ எனக்கு நம்பிக்கை தரவேண்டும் சரியான காரியங்களில் தான் ஈடுபடுகிறாய் என்று. என்ன தொழில் தொடங்க போகிறாய்?
நந்தாவோ, அப்பா தொழில் தொடங்குவதெல்லாம் ஆபத்து. நமது பணத்திற்க்கு உத்திரவாதம் கிடையாது. கொரோனா காலங்களில் தொழில் செய்பவர்களின் வாழ்க்கையை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் சற்று வித்தியாசமாக நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய போகிறேன், அதற்க்கு அவர்கள் மாதம் 8% முதல் 10% வரை வட்டி தருகிறார்கள். 11 மாதம் உடன்படிக்கை முதலீட்டை திருப்பி கேட்கக் கூடாது.
நந்தாவின் தந்தை வாயடைத்து நின்று, எந்த வங்கியில் தருகிறீர்கள் என்று கேட்க. அப்பா எந்த வங்கியும் உலகத்தில இவ்வளவு வட்டி தருவதில்லை, சுவிஸ் வாங்கி கூட கிடையாது. தனியார் நிதி நிறுவனங்கள் சிறந்த வல்லுநர்களை கொண்டு மக்களின் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து நமக்கு அதில் வரும் லாபத்தை வட்டியாக தருவாங்க. நான் உட்பட என் நண்பர்கள் அனைவரும் அதில் சேரலாம் என்று முடிவு செய்திருக்கின்றோம். படிச்சு வேலை இல்லாமல் திட்டு வாங்குவதற்க்கு பதில் இந்த வழியை தேர்ந்து எடுத்திருக்கிறோம் .
சரிடா மகனே, கொஞ்சம் சந்தேகம் அதை சொல்லு கடைசியா முடிவு பண்ணிக்கலாம், உனது முதலீடு சரியானதா என்று. நிதி நிறுவனம் பங்கு சந்தையில் முதலீடு பண்ணுகிறது என்கிறாய் , எந்த நிறுவனங்கள் மீது முதலீடு ? நிறுவனங்கள் ஆண்டுக்கு 10% வளர்ச்சிக்கே எவ்வளவு சிரமப்படுகிறார்கள். நீயே சொன்ன தொழில் தொடங்கினா ஆபத்து என்று. அப்பறம் எப்படி அதன் மேல் முதலீடு பண்ணினா லாபம்?
96% முதல் 120% வரை முதலீட்டின் மீதான வருவாய் உலகில் எங்கும் இல்லை. அப்படி ஒன்று இருக்குமாயின் அரசாங்கம் இந்த வேலையை முதலில் செய்திருக்கும், சில நிதி நிறுவனங்கள் ஆரம்ப முதலீட்டாளர்களை கொண்டு செயற்க்கையான வளர்ச்சியை காட்டி நிறைய பேரை கவர்ந்து கடைசியாக பணத்தை சுருட்டி கொண்டு ஓடி விடுவார்கள். ஓவ்வொரு கால கட்டத்திலும் இந்த மாதிரியானவர்கள் மக்களை ஏமாற்றி கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை நம்பி நீ குறுகிய கால வருவாயை நம்பி எதிர்காலத்தை தொலைத்து விடாதே.
உண்மையான முதலீடுகள் அறிவு, திறமை, நம்பிக்கை, நேரம், அனுபவம். இதை கொண்டு உனது வாழ்க்கையை மேம்படுத்து. தந்தையின் அறிவுரை கேட்டு தனது நண்பர்களுக்கு எடுத்துரைத்தான் ஆனால் அவர்கள் கேட்கவில்லை. நந்தா கல்லூரி சென்று நன்கு படித்து பெரிய நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தான். அங்கு அவனுக்கு அலுவலக உதிவியாளர்கள் இருந்தனர்.
முதல் நாள் நந்தா நிறுவன காரில் வந்தான் அவனது காரை உதவியாளர் ஒருவன் வந்து திறந்தான். காரிலிருந்து இறங்கிய நந்தா அவனது உதவியாளனை கண்டு அதிர்ச்சி அடைந்தான். அவன் நந்தாவின் பள்ளி கூட நண்பன், அவன் பெயர் செந்தில். என்னாச்சு செந்தில்? நீ பெரிய பணக்காரனாகியிருப்பாய் என்று நினைத்தேன், உன் முதலீடுகள் என்னாச்சு?
அனைத்தும் போயிடுச்சு. முதல் சில மாதங்கள் சரியான தேதியில் வட்டி. அதை நம்பி வங்கியில் கடன் வாங்கி , சொந்த பந்தங்களிடம் பணம் கடன் வாங்கி பேராசையில் நிறைய பணங்களை முதலீடு செய்தேன். எனது முதலீடுகள் தவறாக போனதனால் இந்த நிலைமை. உனது தந்தையின் அறிவுரையை நீ கேட்டு நடந்தாய் , இன்று நல்ல நிலைமை .
கதை கருத்து :
வெற்றிக்கான முதலீடு பணம் கிடையாது. அறிவு , திறமை , நடத்தை தான் வெற்றியின் முதலீடு. கல்வியின் முதலீடு உனக்கு மட்டும் கிடையாது உன் சமூகத்திற்க்கானது. கல்வி என்றுமே கை விடாது.
பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்வதை விட, அன்பை சரியான இடத்தில் காட்டுங்கள். வாழ்வு நன்றாக இருக்கும் ..
மாய இருளான நிதி மோசடிகளில் இருந்து வெளி வர இந்த கதை ஒரு முயற்சி .