கதை கேளு — மௌனம்
தொழிலதிபர் அவரது நிறுவனத்திற்கு மேலாளர் பணிக்கு நேர்காணல் நடத்தினார். நேர்காணலுக்கு பலர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் ஒரு அறையில் அமர சொல்லி முதலில் குழுமுறையில் கலந்துரையாடல் நடத்தினர். புது வணிகவர்த்தக ஆய்வுகளை பற்றிய கலந்துரையாடலில், வந்தவர்களில் பெரும்பான்மையோர் தங்களது கருத்துகளை பகிர்ந்தனர்.
இறுதியாக நிறுவனத்தின் பொது மேலாளர், உரிமையாளரிடம் வந்தவர்களில் 5 பேரை தேர்ச்சி செய்து அனுப்பினார். அனைவரையும் பார்த்து விட்டு உரிமையாளர், பொது மேலாளரை அவரது அறைக்கு அழைத்து, மேலாளர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்த நபரின் பெயரை தெரிவித்தார்.
பொது மேலாளர் அதிர்ச்சியடைந்ததார். நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் எங்கள் பட்டியலில் கடைசி நபர். எந்த அடிப்படையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மேலாளர் பதவிக்கு அவர் சிறந்தவர் என கருதுகிறீர்கள்.
உரிமையாளர் சற்று சிரித்து முதலில் நீங்க சொல்லுங்க ஏன் அந்த நபர் உங்கள் பட்டியலில் கடைசி.
உடனே பொது மேலாளர் தான் குறித்து வைத்திருந்த தொகுப்புகளை பார்த்து , அந்த நபர் மிகவும் அமைதியானவர் குழு கலந்துரையாடலில் அவர் கருத்துக்கு யாராவது எதிர் கருத்து கூறினால் அவர் விவாதம் செய்யாமல் மௌனமாக இருக்கிறார். அதிகம் பேச வில்லை, புதிரான கேள்விகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறார். ஆனால் மற்றவர்கள் பதில் கூற முயற்சிக்கிறார்கள். அதனால் தான் அவர் 5 நபர்.
உரிமையாளர், உங்களுடைய கணிப்பு சரி, ஆனால் அதை நான் வேறு விதமாக நோக்குகிறேன். அதிகம் பேசுபவர்கள் அறிவாளி அல்ல, குறைந்து பேசுபவர்கள் முட்டாள்கள் அல்ல. விடை தெரியாத கேள்விகளுக்கும், எடக்கான கேள்விகளுக்கும் மௌனம் தான் பதில். மௌனம் ஒரு மொழி அது அனைவருக்கும் புரியாது. விவாதங்களில் எதிர்கருத்துக்கு பதில் அளிக்கமால் அமைதி காப்பது, அடுத்தவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பதாக கருதலாம். தேவையில்லாத விஷயங்களில் வீண் விவாதங்களை தவிர்க்கலாம் . அதனால் தான் நான் அவரை தேர்ச்சி செய்தேன்.
மௌனத்தை தவம், விரதம் என்பார்கள் , இல்லை மௌனம் பெரிய ஆயுதம். நம்மை ஒருவர் தாக்குவதற்கு எடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் மௌனம். மௌனமாய் இருப்பவர்களை குறைத்து எடை போட வேண்டாம். பல பிரச்சனைகளில்,சங்கடமான சூழ்நிலைகளில் மௌனம் காப்பது சிறந்தது
சரியாக சொன்னீர்கள், தவறான பதிலை காட்டிலும் மௌனம் சிறந்தது. அவருக்கான பணி நியமனத்தை உடனே அனுப்பி விடுகிறேன்.
கதை கருத்து :
தவறான பதில்களை விட மௌனம் சிறந்தது. எதிரிகளை கூட அடக்கிவிடலாம் இன்று நாக்கை அடக்கி அமைதி காப்பது சிரமம். அனுபவங்கள் நமக்கு மௌனத்தை கற்றுக்கொடுக்கும், கற்றுக்கொள்ளுங்கள் தவற விட்டுவிடாதீர்கள்.
என் மௌனத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், என் வார்த்தைகளை எவ்வாறு புரிந்து கொள்வீர்கள்? — புத்தர்
வீண் பேச்சுகளை பேசாமல் மௌனம் காப்பது பெரிய திறமை. அந்த திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.