கதை கேளு — யதார்த்தம்
கல்லூரி மாணவர்களிடையே சிறப்பு உரையாற்ற பேச்சாளராக உள்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பை ஏற்று அவர் அங்கு வந்து உரையாற்றினார்.
அவரது பேச்சு மாணவர்களை உற்சாக படுத்தியது, எத்தனை பேர் இங்கே வெளிநாடு சென்று பணிபுரிந்து அங்கேயே நிரந்தரமாக குடியேற ஆசை என்று கேட்க , 90% மாணவர்கள் கைகளை உயர்த்தினார். சரி சபாஷ், நான் ஒரு கதையை சொல்கிறேன் கேளுங்கள் என்று ஆரம்பித்தார்.
மாணவர்களிடையே சற்று சலசலப்பு அமைச்சர் நமக்கு வெளிநாட்டு வேலை வாங்கி தருவாரோ?
சலசலப்பை கவனித்த அமைச்சர், நான் வேலை வாங்கி தருவேனா என்று எனக்கு தெரியாது. ஆனால் உங்களுக்கு யதார்த்த வாழ்க்கை வாழ வழி கூற முடியும்.
கேளுங்கள் என்று ஆரம்பித்தார்.
மணிகண்டன் என்ற பணக்கார வீட்டு பையன் ஒரு நகரில் இருந்தான், அவனது குடும்பம் ராஜா குடும்பம். மணிகண்டனின் தகப்பனார் மிகவும் எளிமையானவர், அவர் அவர்களின் குடும்ப தொழில்களை கவனித்து வந்தார். மணிகண்டனிடம் சற்று கண்டிப்புடன் இருப்பார். அது மணிகண்டனுக்கு சுத்தமாக பிடிக்காது, தனக்கான சுதந்திரத்தை தந்தை தருவதில்லை. இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் தம்மால் வேண்டியதை பெற முடையவில்லை என்ற வருத்தம் அவனுக்குள் ஆழமாக பதிந்திருந்தது. அவனுக்கு வெளிநாடு போய் அங்கு வாழவேண்டும், அந்த வாழ்க்கைதான் நன்றாக இருக்கும் என்ற நினைப்பு . இவ்வளவு சொத்து வைத்துக்கொண்டு இந்த கிராமத்தில் ஏன் வாழ வேண்டும் அன்று பல கேள்வி அவனுக்குள்?
எப்பொழுது பார்த்தாலும் சிந்தனை கனவில் மூழ்கி இருப்பான் , எப்படி வாழலாம் , அப்படி இருக்கலாம், அங்கே இருந்தால் என்று. அவனது தந்தை அவனை பல முறை எச்சரித்தார். யதார்த்தமான வாழ்க்கை வாழ பழக வேண்டும்.
மிகுந்த கோவத்தில் இருந்த அவன் தன் தாயிடம் சென்று அப்பா மிகப்பெரிய கருமி , பணம் செலவு செய்து வாழ அவருக்கு விருப்பமில்லை , கடைசியாக இந்த பணத்தை எடுத்து செல்லவா போறார் ? இவர் யதார்த்தமாக இருக்காமல், என்னை பார்த்து இருக்க சொல்லறாரு! நான் எவ்வளவு யதார்த்தமா இருக்கின்ற சொத்தை அனுபவிக்க சொல்கிறேன் , காதுக்கொடுத்துக்கூட கேட்கவில்லை என் யோசனைகளை.
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது மணிகண்டா என்று அவன் தாய் அவனுக்கு அறிவுரை கூறினால் . யதார்த்தம் என்பது நீ சொல்லும் அர்த்தம் கிடையாது. யதார்த்தம் என்பது கற்பனையல்லாதது, உண்மையான நிலை / நிலவரம் . பணத்துடன் வெளிநாடு சென்று மட்டும் வாழ முடியாது , நமக்கு அந்த கலாச்சாரம் தெரிய வேண்டும் , மொழி தெரிய வேண்டும் , நமது சொந்தங்கள் இங்கிருக்க பணத்தை மட்டும் கொண்டு பொய் என்ன செய்வாய் ?
இதையெல்லாம் நீ புரிந்து கொள்ளாமல் கற்பனைகளில் மிதப்பதை தான் அப்பா யதார்த்தமாக இருக்க சொல்கிறார். வாழ்க்கை யதார்த்தத்தை பற்றி ஒருவர் வாழைப்பழத்துடன் ஒப்பிட்டு கூறியதை நான் படித்திருக்கிறேன். அதை பற்றி நீயும் அறிந்து கொள்ள வேண்டும் .
“பணிவாக இரு! நீ எப்போதும் புதிதாக இருக்க மாட்டாய்!” வாழைப் பழத்தை வகைப் படுத்தி வாழ்க்கையின் யதார்த்தத்தை அழகாக எடுத்துரைத்து இருப்பார்கள் .
பழத்தை போல நம் வாழ்க்கையின் யதார்த்தம், இளமை பலம் , வேகம், போட்டி , துடிப்பு , வாழ்வின் இறுதி வரை ஒருபோதும் இருப்பதில்லை. இளமை இன்பத்திற்க்காக முதுமையை தொலைக்க கூடாது. மனிதனும் கருகிக் கொண்டிருக்கிறான் வாழ்க்கைப் பயணத்தில் வாழைப்பழம் போல என்பதை நீ புரிந்து செயல்படு!
இனி வாழைப் பழத்தை கையில் எடுக்கும் போதெல்லாம், அது உனக்குச் சொன்ன வாழ்க்கைப் பாடத்தை மறந்து விடாதே?
இது தான் யதார்த்த வாழ்க்கை என்று. அங்கும் இங்கும் போவதை நிறுத்தி விட்டு இங்கேயும் உன்னால் நிம்மதியாக வாழ , மற்றவர்களையும் வாழ வைக்க முடியும் என்று நம்பு. எங்கேயோ சென்று அங்கு உள்ள சுகங்களை அனுபவிக்க நினைக்கும் நீ , அதை உன் சொந்தகளுக்கும் , மக்களுக்கும் இங்கு உருவாக்க முயற்சி செய்.
தாயின் அறிவுரையை கேட்ட மணிகண்டன் பின் நாளில் தன் நகரை சிறந்த நகரமாக்க வேண்டும் மற்றும் தன் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி காட்ட வேண்டும் என்று முனைப்பு காட்டி,சமூக சேவைகள் செய்து , நகர தலைவராக தேர்ந்தெடுக்க பட்டு அந்த நகரத்தை சிறப்பாக மாற்றினான்.
அந்த மணிகண்டன் என்கிற மனோகரன் தான் இன்று அமைச்சராக உங்கள் முன். இப்பொழுது கூறுங்கள் எத்தனை பேர் இங்கேயே யதார்த்த வாழ்க்கை வாழ விரும்புகிறீர்கள்?
அனைவரும் கைகளை தூக்கி எழுந்து நின்றனர்.
நன்றி மாணவ நண்பர்களே !
கதை கருத்து :
யதார்த்த வாழ்க்கை வாழை பழம் வகைகளை போல் புரிந்து கொண்டிருந்தால் பகை,பொறாமை, அழுகை, கோபமென்ற உணர்வுகள் தேவைப்படாமலேயே போயிருக்கும்.
என்ன வாழ்க்கைடா என வினவுவதை விட , எது யதார்த்தம் என்றுதான் பார்க்க வேண்டும்.
அனைத்தும் பழகிவிடும், இதுவும் கடந்து போகும் என்ற மன நிலை இருந்தால் யதார்த்த வாழ்க்கை அனைவராலும் வாழலாம் .