கதை கேளு — வண்ணங்கள்

Sankar sundaralingam
2 min readMar 20, 2021

--

ஒரு ஊரில் தெருக்கூத்து ஒன்று நடந்தது. அதில் ஐந்து வண்ணங்கள் கொண்ட உடை மற்றும் முகமூடி அணிந்து ஐந்து நபர்கள் நாடகங்களை நடத்தினர். அந்த நாடகத்தின் கதை ஐந்து வண்ணங்களின் மகிமை. ஐந்து வண்ணங்களில் சிறப்புக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல இந்த நாடகம் நடத்தப்பட்டது.

நாடகத்தில் முதலில் வெள்ளை நிறம், நான் அமைதியின் அடையாளம். வெண்மேகம், என் நிறம் வெளிச்சத்தின் அடையாளம். நான் வெள்ளை காகிதம், நான் நான் இல்லாமல் எந்த சித்திரமும் வரைய முடியாது. நான் இயற்கை கொடுத்த வண்ணம் என்று தனது பெருமைகளை எடுத்துரைத்தது.

இரண்டாவதாக கருப்பு நிறம் தன்னைப் பற்றி பேச ஆரம்பித்தது, வெளிச்சத்திற்காக ஒரே சாட்சி கருப்பு. கருப்பு ஒரு ஈர்ப்பு, கருப்பு என்பது காந்தம். எழுத்தின் நிறம் கருப்பு வெள்ளைத்தாள் இருந்தாலும் அதில் கருத்துக்கள் நிரப்ப கருப்பு உதவி தேவை. கருப்பு இல்லாமல் வாழ்க்கை கிடையாது.

மூன்றாவதாக சிவப்பு நிறம் கூறியது, சிவப்பு என்றால் எழுச்சி. நான் உழைப்பாளிகளின் அடையாளம். சிவப்பு காதல் புரட்சி, குருதியின் நிறம், பெண்களின் குங்குமம். நான் சிவப்பு செவ்வானம், இவ்வுலகில் செவ்வானம் கண்டு மகிழாதவறில்லை.

அடுத்ததாக பச்சை நிறம், நான் பசுமை. விவசாயிகளின் அடையாளம். பச்சை பசுமையை கண்டால் கருப்பு வெள்ளை கண்களுக்கு குளிர்ச்சி, மனதுக்கு அமைதி. பச்சை நிற விளக்கை கண்டால்தான் வாகனம் கூட நகர்ந்து செல்ல முடியும்.

இறுதியாக நீலநிறம், கண்ணனின் நிறம், வானும் கடலும் என் நிறம். வேற என்ன பெருமை வேண்டும் எனக்கு இதைவிட?

இப்படி ஐந்து வண்ணங்கள் வேடமிட்டு அவர்கள் ஐந்து வண்ணங்களின் சிறப்புகளை பரப்பிக் கொண்டிருந்தனர். இறுதியாக நாம் அனைவரும் இணைந்திருந்தால் தான் எழுச்சி.

வாழ்வில் வண்ணங்கள் மட்டும் எல்லை என்றால், மனித எண்ணங்களுக்கு இல்லை இருந்திருக்கும். கருவிழியில் வண்ணங்களை காண்கிறான் மனிதன், சிவப்பு இதயத்தில் வண்ணங்கள் நிறைந்த நினைவுகளை சுமக்கிறான். வண்ணங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை, வண்ணங்கள் தான் வாழ்க்கையை அழகாக்குகின்றன.

வண்ணங்கள் ஒவ்வொன்றும் அழகிய மொழிகள், இயற்கை வண்ணங்களை கொண்டு அழகிய கவிதை பொழிகிறது அதுதான் வானவில்.

வண்ணங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி சிறப்பு உண்டு, குணாதிசயங்கள் உண்டு ஆனால் அவை அனைத்தும் இணைந்து இருந்தால் எப்படி ஒரு எழுச்சி பிறக்குமோ. அதுபோல மனித சமுதாயங்கள் இணைந்து செயல்பட்டால் மிகப்பெரிய சமுதாய எழுச்சி, வளர்ச்சி கட்டாயம் கிட்டும் என்று தங்கள் கருத்துக்களை கூறி நாடகக் குழுவினர் விடைபெற்றனர்.

கதை கருத்து:

பெருகட்டும் வண்ணங்கள்!

வளரட்டும் எண்ணங்கள்!

பல வண்ணங்கள் மலர்களுக்கு அழகு, நல்லெண்ணங்கள் மனிதனுக்கு அழகு. வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கைகள் இருந்தும் சிறு குறையினால் பயப்படும் மனித பறவை எண்ணங்களை பக்குவப்படுத்தி பறக்க முற்படவேண்டும். வண்ண வண்ணமாய் ரூபாய் நோட்டுகள் இருந்தும் எந்த பயனும் இல்லை, வளமான எண்ணங்கள் தான் வாழ்க்கையைக் கொடுக்கும்.

வண்ணங்கள் நிறைந்த எண்ணங்கள் வளமாக்கும் வாழ்க்கை தனை.

--

--

No responses yet