கதை கேளு — வழி பிறக்கும்

Sankar sundaralingam
2 min readJan 15, 2022

--

காட்டுப்பாதையில் உள்ள ஜமீன்தாரின் தோட்டத்தின் வழியாக கிராம மக்கள் மற்றும் யானைகள் தண்ணீர்காக கடந்து செல்கின்றனர். ஜமீந்தார் எச்சரித்தும் கிராம மக்கள் அந்த வழியாக சென்று தான் தங்களுக்கான குடிநீரை கொண்டு வரவேண்டிய நிலை, இல்லையென்றால் வெகு தூரம் கடந்து செல்ல வேண்டும்.

ஒருநாள் இரவோடு இரவாக ஜமீன்தார் இரும்பு முள் வேலிகள் அமைத்து அதில் மின்சாரத்தை புகுத்தினார். அதனால் மக்களால் வேலிகளை உடைக்க இயலவில்லை. வெகுநேரம் அங்கேயே நின்று புலம்பி கொண்டிருந்தனர். இனி என்ன செய்வது நம்மால் இந்த கிராமத்தில் வாழ வழியில்லை, வேறு எங்காவது சென்று விடலாம்.

அந்த வழியாக வந்த யானை கூட்டம் மின்சார முள் வேலிகளை இடிக்க முயன்றது , அவைகள் மேலே மின்சாரம் தாக்க உடனடியாக யூகித்துக்கொண்டது.

கிராம மக்கள் அனைவரும் யானைகளை பார்த்து அட பாவம் வாயில்லா ஜீவனால் எப்படி இந்த மின்சார வேலிகளை தாண்டி போக முடியும் , நம்மனாலேயே முடியல ?

உடனடியாக யானைகள் திரும்பி சென்றன.

பார்த்தாயா!! யானைகளே இங்கு இருந்து திரும்பு சென்றது என ஜமீன்தாரின் வேலைக்காரன் கூக்குரல் செய்தான்.

திரும்பி சென்ற யானைகள் கூட்டம் சற்று நேரத்தில் வாழை தோப்புக்கு சென்று அங்குள்ள வாழை மரங்களை தும்பிக்கையால் எடுத்து மீண்டும் வந்தது . கிராம மக்களுக்கு ஒரே ஆச்சர்யம் என்னடா வாழை மரங்களுடன் மீண்டும் யானைகள் கூட்டமாக இங்கே வருகின்றது , ஒரு வேலை நம்மை தாக்குமோ என்று பயந்தனர் .

யானைகள் வாழை மரங்களை தூக்கி மின்சார வேலி மீது எரிந்தது , உடனே மிக பெரிய சத்தம் ஜமிந்தாரின் மின்சார கம்பங்கள் வெடித்தது.

மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர் , வாழை மரங்களால் மின்சாரம் பழுதானது, யானைகளுடன் சேர்ந்து அந்த முள் வேலிகளை இடித்தனர்.

யானை கூட்டத்தை பார்த்து ஒரே வியர்ப்பு அந்த கிராம மக்களுக்கு தனது பாதையில் பிரச்னைகள் வந்தாலும் சற்றும் தளராமல் மாற்று யோசனை செய்து செயல் படுத்திக்கின்றன.

கிராம தலைவர் கூறினார் , ஒரு கதவு அடைக்கப்பட்டால் மற்றொரு கதவு திறந்து இருக்கும் , அதை நாம் தான் தேட வேண்டும். கஷ்டங்கள் வரும் பொழுது புலம்பி அழுதுகொண்டு , கவலைகளை மனதில் சுமப்பதை விட அடுத்து என்ன செய்யலாம் என நினைத்து கவனத்தை செலுத்தினால் வாழ வழி பிறக்கும். நமக்கான வழியை நாம் தான் உருவாக்க வேண்டும் , பிரச்சனைகள் வரும் பொழுது யோசித்து சிறந்த முடிவுகள் எடுத்து செயல் படுத்த வேண்டும். பல்முனை போட்டிகளை சமாளித்து தான் வர வேண்டும் , துவண்டு விட கூடாது.யானைகள் அந்த பாடத்தை நமக்கு கற்று கொடுத்தது . கிராம மக்கள் அனைவரும் புன்னகையோடு யானைகளை பார்த்து வணங்கினர்.

அவர்கள் அனைவரும் ஜமிந்தாரை சந்தித்து நடந்ததை கூறி இதற்க்கு நிரந்தர தீர்வு வேண்டும் என கூறி, தங்கள் கிராமத்தில் உள்ள நிலத்தில் ஒரு பகுதியை கொடுத்து வழி தடத்தை ஊரின் பெயரில் வாங்கினர். யானைகளுக்கும் அதில் பாதைகள் அமைத்தனர் .

கதை கருத்து:

விதை விதைத்தால் உணவு கிடைக்கும் அதுபோல நல்லதை மனதில் விதைத்தால் வழி பிறக்கும்.

வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும், நல் வழி பிறக்க தற்காலிக வலியை நிரந்தர வெற்றி வழியாக மாற்ற வேண்டும்.

விழிகளை திற ஒளி பிறக்கும்,

எழுந்து நட வழி பிறக்கும் .

வழி பிறந்து உங்கள் வாழ்வில், ஒளி பிறக்கட்டும் !

--

--

Responses (1)