கதை கேளு — வாய்ப்புகள்

Sankar sundaralingam
2 min readJan 16, 2021

--

https://anchor.fm/sankar-sundaralingam/episodes/--ep1ttq

ஒத்திகை ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. 500 மீட்டர் ஒத்திகை ஓட்டப்பந்தயத்தில் நான்காம் இடத்தைப் பிடித்த நபர் தனது பயிற்சியாளரை சந்திக்கிறார். பயிற்சியாளர் அந்த இளைஞனைப் பார்த்து நல்ல வாய்ப்பை தவற விட்டாயே? என கேட்கிறார். அதற்கு காரணம் இந்த ஒத்திகை ஓட்டப்பந்தயத்தை பார்வையிட ஆதரவாளர் வந்திருந்தார். இந்த ஓத்திகை ஓட்டப்பந்தயத்தில் முதல் மூன்று நபர்களுக்கான தொகையை தான் ஏற்றுக் கொள்வதாக ஆதரவாளர் கூறினார். இளைஞன் நல்ல ஆதரவாளர் தனக்கு முழு தொகையையும் ஏற்றுக்கொள்ள கிடைக்க வேண்டுமென இருந்தான். அது அவனுக்கு தெரியாமல் போனது, இருந்தாலும் அவன் குருவின் கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கிறான். குரு இது ஒத்திகை தான் நான் சிறந்த ஓட்டத்திற்கு காத்திருக்கிறேன் எனது திறமைகளை சிறிய ஓட்டங்களில் அல்ல.

பயிற்சியாளர் இளைஞனிடம் நீ முதலில் அடிப்படையை புரிந்து செயல்பட வேண்டும். சில சிறந்த தருணங்களுக்காக காத்திருக்கும் காலங்களில், பல சிறந்த வாய்ப்புகள் நம்மை கடந்து சென்று விடும். வாய்ப்புக்காக காத்திருக்காதே. வாய்ப்பை நீயே உருவாக்கு, உனக்கான சாதனைகளை அது உருவாக்கும்.

இளைஞன் பயிற்சியாளரிடம் கேட்கிறான். அப்படியென்றால் வாய்ப்பு ஒரு முறைதான் வருமா?

பயிற்சியாளர் அப்படி நான் சொல்லவில்லை. உன் புரிதல் தவறு. வாய்ப்பு ஒவ்வொரு முறையும் வரும், உன் தேடலில் வேகம் அதிகமாக இருந்தால்.

இளைஞன்: வாய்ப்பு சிறிதா, பெரிதா என எப்படி தெரியும்? சிறிய வாய்ப்புகளுக்கு எதற்கு அதிக திறமையைப் பயன்படுத்த வேண்டும்?

பயிற்சியாளர்: பெரிதோ சிறிதோ அதை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது நமது வெற்றி. சிறிய வாய்ப்புகள் என்றாலும் அதை சிறப்பாக செய்து முடி. பெரிய வாய்ப்புகள் உன்னை தேடிவரும்.

இளைஞன்: அப்படி என்றால் நான் வாய்ப்புகளை தவற விட்டு விட்டேனா?

பயிற்சியாளர் : இன்று ஓட்டப்பந்தயத்தை பார்ப்பதற்கு ஆதரவாளர் வந்திருந்தார். இப்போது முக்கியத்தை புரிந்துகொள்.

இதைக் கேட்ட இளைஞன் முகம் வாடியது. அவனை உற்சாக படுத்த பயிற்சியாளர் கூறியது, வாய்ப்புகள் தவறலாம், முயற்சிகள் தவறக்கூடாது. வாய்ப்பு என்பது பறித்துக் கொள்வது அல்ல, திறமையால் நாம் தேடிக் கொள்வது. உன் திறமையில் முழுமையாக கவனம் செலுத்து, வாய்ப்பு உன்னை தேடிவரும். வாய்ப்பு அமைய காத்திருக்க வேண்டாம் நீ அமைத்துக் கொள்.

பயிற்சியாளரின் அறிவுரையை கேட்ட இளைஞன். பின்நாட்களில் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு கடிகார முட்கள் மாதிரி நிற்காமல் ஓடி, உள்ளூர் மற்றும் வெளியூர் ஓட்டப் பந்தயங்களில் பல சாதனைகளை படைத்தார் .

கதை கருத்து:

வாய்ப்புகள் நீ செல்லும் பாதையில் சிறிய சிறகாய் இருக்கலாம். உதாசீனப்படுத்திவிட்டு செல்லாதே. தன் வீட்டு கதவு என்றாலும் தட்டி தான் திறக்க வேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்தினால்தான் வெற்றிக் கனியை அடைய முடியும். முயற்சித்துக் கொண்டே இரு, வாய்ப்பு உன்னை தேடி வரும்.

--

--

No responses yet