கதை கேளு — விட்டுக்கொடுங்க
சுமார் 90 வயது மதிக்கத்தக்க ஒருவர் மரண படுக்கையில் இருந்தார்.அவர் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன தலைமை அதிகாரி. அவரை நேர்காணல் செய்வதற்க்கு பெண் பத்திரிகையாளர் வந்திருந்தார். பத்திரிகையாளர் பெரியவரை சந்தித்து, தான் வந்ததின் நோக்கம், நீங்கள் உலகின் தலைசிறந்த நிறுவனத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர், உங்கள் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பினால் தான் தற்போது அந்த நிறுவனம் உலகின் தலை சிறந்த இடத்தில் உள்ளது. ஆகையால் தங்கள் பெருமைகளையும், சாதனைகளையும் தொகுத்து வழங்கலாம் என யோசித்து இந்த தருவாயில் தங்களை பேட்டி காண வந்துள்ளேன். சிரமத்திற்க்கு மன்னிக்கவும், இந்த தொகுப்பு வருங்கால சந்ததிகளுக்கு பயன்படக்கூடியதாக இருக்கும்.
இதை கேட்டவுடன் மரண படுக்கையில் இருந்த பெரியவர்க்கு உற்சாகம் வந்தது.அவர் படுத்திருந்த நிலையிலிருந்து சற்று மெதுவாக எழுந்து, அமரும் நிலைக்கு மாறினார். எனக்கு மனசுக்குள்ள ரொம்ப நாட்களாக ஓடிக்கிட்டு இருக்கிற விஷயத்தை, இந்த உலகத்திற்க்கு சொல்லணும் என்ற எண்ணம், அது நிறைவேறாம போகிவிடக்கூடாது என்ற கவைலையில் தான் என் உயிரை பிடித்து கொண்டு இருக்கிறேன். இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு, நான் சொல்றதை எல்லாம் கவனமா கேட்டு எழுதிகுங்க, சந்தேகம் ஏதேனும் இருந்தால் கடைசியாக கேளுங்க.
பத்திரிகையாளர் ஆர்வமாய், தான் வந்த காரியம் மிக சுலபமாக, எந்த தடையும் இல்லாமல் விரைவாக நடக்கிறது எண்ணி, பூரிப்படைந்து தனது குறிப்பேட்டில் எழுத ஆயுத்தமானார். பத்திரிகையாளர் எதிர்பார்த்து எழுத தொடங்கியது “நிறுவன கலாச்சாரம், மதிப்புகள், நிறுவன தலைமை அதிகாரியின் குணங்கள், செயல்பாடுகள்”, ஆனால் பெரியவர் ஆரம்பித்தது “விட்டுக்கொடுங்கள் இல்லையென்றால் வாழ்க்கை வீணாகிவிடும்.”
“விட்டுக்கொடுங்கள் இல்லையென்றால் வாழ்க்கை வீணாகிவிடும்” — என்ற வரிகள் சுவாரஸ்யமானதாகவும், நல்ல கருத்தாக இருக்கிறது என்று பத்திரிகையாளர், பெரியவர் சொல்வதை எழுத தொடங்கினார்.
இந்த வரிகளுக்கு சிறந்த உதாரணம் நான். எப்படி என்று யோசிக்கிறீர்களா? பணம், பதவி எல்லாம் வெற்றி கிடையாது. நான் அதிகாரியாக நிறுவனத்தை வழி நடத்தும் போது , என்னிடம் யாராவது வந்து விட்டுக்கொடுங்கள் என்றால் கோபப்படுவேன். அன்று நான் புரிந்து வைத்திருந்தது “ விட்டுக்கொடுத்தல் என்பது கொள்கையை, முயற்ச்சியை, விரும்பியதை விட்டுக்கொடுத்தல் என்ற எண்ணம்”, ஆனால் அது தவறு.
உண்மையில் விட்டுக்கொடுத்தல் என்பது பிடிவாதத்தில் நின்று விடாமல்,உறவுகளை தொடர மேற்கொள்ளும் முயற்சி. உறவுகளிடமும், நண்பர்களிடமும் விட்டுக்கொடுத்தல் தோல்வி கிடையாது. அதில் அன்பு பெருகும், விருப்பங்கள் நிறைவேறும். இல்லற வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் நிம்மதி நிலைக்கும், இவற்றை உணர்வதற்குள் அனைத்தையும் இழந்து விட்டேன்.
யாரிடமும் நான் விட்டுக்கொடுத்து வாழவில்லை, அனைத்திலும் ப
பிடிவாதம், முரண்பாடு, விளைவு என் மனையாள் என்னைவிட்டு பிரிந்து சென்றாள், என் குழந்தைகள் என்னை வெறுத்தனர். நண்பர்கள் என்னுடன் பேசுவதை நிறுத்தினர். இன்று நான் தனி ஆள், நாளை என்னை தூக்கிப்போடக்கூட யாரும் இல்லை.
இதை எந்த ஒளிவு, மறைவு இல்லாமல் சொல்ல காரணம், சிதறிப் போய்விட்ட மனித வாழ்க்கை முறையை சரி செய்திட வேண்டும். பதவிகள், பணங்கள் நிரந்தரமில்லை. அன்பு மட்டுமே நிரந்தரம், அது விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் தான் பெருகும் என்று கூறியபடி பெரியவர் உயிர் பிரிந்தது. பத்திரிகையாளர் கண்களில் இருந்து கண்ணீர் தாரையாக வந்தது, அவள் பெரியவரின் கண்களை தனது கைகளால் மூடி, அருகில் இருந்த செவிலியரிடம் சொன்னார், பெரியவர் அவரின் கண்ணை மூடி, இப்பொழுது பலரின் கண்களை திறந்து விட்டார் தனது கடைசி வரிகளால் — “”விட்டுக்கொடுங்கள் இல்லையென்றால் வாழ்க்கை வீணாகிவிடும்”.
கதை கருத்து
விட்டுக்கொடுங்கள். இல்லை விட்டு விடுங்கள். — புத்தர்.
விட்டுக்கொடுப்பவன் வீழ்ந்து போவதில்லை, தட்டி பறித்தவன் நன்கு வாழ்ந்ததுமில்லை. விட்டு கொடுங்கள் கெட்டு போவதில்லை.
உறவுகளை விட்டு விடாதீர், உறவுகளுக்காக விட்டுக்கொடுங்க!!
விட்டுக்கொடுங்க இல்லறம் நல்லறம் காணும்!!