கதை கேளு — விமர்சனம்

Sankar sundaralingam
2 min readFeb 26, 2022

--

மன்னர் அமைச்சரவை கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார். ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்கள் துறையின் செயல்பாடுகளை விளக்கிக் கொண்டிருந்தனர். உதவியாளர் மன்னரிடம் சென்று தங்களை அவசரமாக சந்திக்க வேண்டும் என்று நமது ஒற்றன் கண்ணப்பன் வந்துள்ளான். அவன் வந்ததுக்கான விஷயத்தை தங்களிடம் மட்டும் தான் தெரிவிக்க விரும்புவதாக கூறினான். மன்னர் கண்ணப்பனை அமைச்சரவை கூட்டத்திற்க்குள் அனுமதிக்க கூறினார்.

மந்திரிசபையினுள் வந்த கண்ணப்பன் அரசன் முன் சென்று காதில் சில தகவல்களை சொன்னான். அமைச்சர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தில் மன்னரின் முகத்தை கவனித்தனர். சற்று நேரத்தில் மன்னர் வேகமாக சிரித்தார்.

கண்ணப்பா , நீ பெரிய விளையாட்டு பிள்ளை, கோபக்காரனாக இருக்கிறாய். கண்ணப்பன் முகம் வாடியது.

மூத்த அமைச்சர் ஒருவர் உடனே குறுக்கிட்டு, அரசே என்னாச்சு ? ஏன் இந்த ஒற்றன் முகம் சோகமாகிறது?

அமைச்சரே நீர் அனுபவசாலி. எனக்கு கண்ணப்பனின் தகவல் மீது எந்த நகைச்சுவையும் இல்லை. அவன் யோசனைதான். கேளும் சொல்கிறேன். நம் நாட்டில் வேலை இல்லாத சிலர் என்னையும், எம் அமைச்சர்களையும் விமர்சனம் செய்கிறார்களாம். அவர்களை தண்டிக்க வேண்டி ஒற்றன் 50 வீரர்களை கேட்கிறான்.

அரசே! விமர்சனம் புதிது கிடையாது நமக்கு, விமர்சனத்திற்கு தண்டிக்க வேண்டும் என்றால் எத்தனை பேரை தண்டிக்க முடியும்.

சரியாக சொன்னீர். கண்ணப்பா கேட்டாயா அமைச்சரின் பதிலை. இது தான் அனுபவம். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வரவேற்க்க வேண்டியது. இன்றைய காலகட்டத்தில் விமர்சனங்கள் என்ற பெயரில் எதிர்மறை கருத்துக்களை தான் பரப்புகிறார்கள். எதிர்மறை விமர்சனங்கள் பற்றி நாம் கவலை அடைய வேண்டாம்.

விமர்சனங்கள் படாத மனிதர்களில்லை. இதில் அரசருக்கு விதி விலக்கு கிடையாது. எத்தனை சிறந்த மனிதனாக இருந்தாலும் விமர்சனம் உண்டு. விமர்சனங்களை எப்படி கடந்து செல்லவேண்டும் என்று தான் பார்க்கவேண்டும். விமர்சனங்களை கடப்பது சாமர்த்தியம், கண்டு ஒதுங்க கூடாது.

விமர்சனங்களால் வாழ்ந்தோரும் இருக்கிறார்கள், வீழ்ந்தோரும் இருக்கிறார்கள் .

விமர்சனம் செய்பவர்கள் விமர்சனத்துக்கு உரியவரிடம் சொல்ல வேண்டும் , போன போக்கில் சொல்லுகிற விமர்சனத்துக்கு நாம் பதில் சொல்ல தேவையில்லை .

ஒன்றை தெரிந்து கொள், வென்றவனுக்கும், தோற்றவனுக்கும் இந்த உலகில் வரலாறு உண்டு. வேடிக்கை பார்த்தவனுக்கு, விமர்சித்தவனுக்கும் ஒன்றும் இல்லை.

இயலாதவன் கையில் எடுக்கும் ஆயுதம் விமர்சனம். வேடிக்கை பார்ப்பவன்தான் விமர்சிப்பான், களத்தில் உள்ளவன் சிரமப்படுபவர்களுக்கு ஓடி வந்து உதவுவான்.

கண்ணப்பன் அரசரைப் பார்த்து வணங்கி விடை பெற்றான். பின்னாளில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை மக்களிடமிருந்து அறிந்து மன்னருக்கும், அமைச்சருக்கும் தவறாமல் தெரியப்படுத்தினான். எதிர்மறை விமர்சனங்களுக்கு செவி சாய்க்கவில்லை.

கதை கருத்து

“உன்னை அதிகம் விமர்சிப்பவனே, உன்னை கண்டு அதிகம் பயப்படுகிறான் “- பிடல் காஸ்ட்ரோ

விமர்சனம் என்ற ஆயுதத்தினால் வீழத்த நினைப்பவர்களிடமிருந்து மீண்டு வாருங்கள் சாமர்த்தியமாக.

தோன்றும் விதத்தில் பேசும் விமர்சனங்களுக்கு விலாசம் தேடாதே. எதை செய்தாலும் விமர்சிப்பார்கள், விமர்சனத்தை கண்டு அஞ்சாதே, விமர்சனங்களை விதைகளாக்கி உனது காட்டை பெருக்கு.

விமர்சனம் செய்பவர்களையெல்லாம் விமர்சித்து கொண்டிருந்தால் நம் நேரமும், சக்தியும் தான் வீணாகும். கடந்து செல்.

--

--

Responses (2)