கதை கேளு — வென்றிடுவோம்

Sankar sundaralingam
2 min readMay 1, 2021

--

கொடிய நோய் ஒன்று ஒரு நாட்டை தாக்கியது. மக்கள் ஆங்காங்கே மடிந்து சாய்ந்தனர். அரசன் செய்வதறியாது திகைத்தான். நாட்டில் தலைசிறந்த மருத்துவர்களை வரவழைத்து, இந்த கொடியை அகற்றி மக்களை காக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டான். மருத்துவர்களுக்கு நோயின் தன்மையை பற்றி அவ்வளவு தெளிவு இல்லை. இது புதிய வகையான நோயாக இருப்பதால் தங்களுக்கு சற்று கால அவகாசம் வேண்டும் என்றும், இருப்பினும் பல ஆலோசனைகளை அரசிடம் வழங்கி மக்களை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர்.

இப்படி ஒருபுறம் அரசும், மருத்துவர்களும் போராடிக் கொண்டிருக்கையில், மறுபுறம் அரசை களங்கப்படுத்தி அரசு எடுக்கும் முயற்சிகள் எதுவும் சரி இல்லை, அரசாங்கத்திற்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்று மறு தரப்பு. இவர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எந்த ஒரு ஒத்துழைப்பு அளிப்பதில்லை.

இந்த சூழ்நிலையில் அந்த நாட்டிற்கு ஒரு முனிவர் வந்தார். அவரிடம் சென்று அரசாங்கத்தைப் பற்றி அந்த கும்பல் சரமாரியாக புகார்கள் கூறியது. எங்கள் அரசாங்கத்தினால் தான் இத்தனை உயிர்கள் பலியாகி விட்டது. அரசாங்கம் கடமை தவறியது என்றும் கூறினர். அதற்கு அந்த முனிவர் அப்படியானால் உங்களிடம் ஏதாவது யோசனை இருக்கிறதா? என கேட்டார்?

நாங்கள் அப்படி செய்திருப்போம், இப்படி செய்திருப்போம் என்றனர். முனிவர் எப்படி என்று கூறுங்கள்? நீங்கள் சொல்லும்படி செய்தாள் இந்த நோய் தன்மை குறையுமா?

தெரியாது முயற்சி செய்துதான் பார்க்கணும்.

முனிவர் : அரசாங்கம் அது தானே செய்கிறது!

நாம் அனைவரும் அடுத்தவர்கள் செய்யும் வேலையில் உள்ள சிறு தவறுகளை கண்டறிந்து அதை ஊதி பெரிதாக்கி பெருமை அடைவதே நோக்கமாகக் கொண்டுள்ளோம். அவர்களின் 99% சரியான அணுகுமுறையை பாராட்டி எப்படி 100 சதவீதம் கொண்டு செல்வது என முனைப்பு காட்டுவது கிடையாது.

முனிவர் அந்த நாட்டு மக்களை பார்த்து கூறினார். போராட்ட, துன்ப காலங்களில் எப்படி ஒன்றிணைந்து வெல்ல வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும். களத்தில் இறங்கி வேலை பார்ப்பவர் யாரும் குறை சொல்வது கிடையாது. ஏனெனில் அவர்களுக்கு வலி தெரியும். ஆனால் சும்மா இருந்து கொண்டு குறை சொல்பவர்கள், எதை செய்தாலும் சொல்வார்கள். ஆதலால் நீங்கள் அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து ஒன்றுபட்டு வென்றிடுக.

முனிவரின் ஆலோசனைப்படி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நோயை எதிர்த்து போராடி வென்று மக்கள் அனைவரையும் காப்பாற்றினர்.

கதை கருத்து:

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

எதை செய்தாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் எங்கும் உண்டு. அதற்கு செவி சாய்க்காமல் உங்கள் கடமையை தவறாமல் செய்யுங்கள், வெற்றி உங்களுக்கே.

அன்பால் அனைவரும் ஒன்றிணைவோம்!

துன்பங்கள் யாவையும் வென்றிடுவோம்!

--

--

No responses yet