கதைகேளு — சகிப்புத்தன்மை
அப்பா , அம்மை சண்டை, இதை கவனித்த பெண் குழந்தை , தனது அப்பாவிடம் சென்று, அப்பா உங்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம் , அம்மை சும்மா வீண் சண்டை போட்டாலும் சகித்துக் கொண்டு அமைதியாக செல்கிறீர்கள். உங்களுக்கு கோபம் வராதா? அம்மையை பார்த்தால் அவ்வளவு பயமா?
அப்பா சிரித்து கொண்டே, கண்மணி! சகிப்பு தன்மை என்பது பலவீனமல்ல, பலத்தின் அடையாளம்.
அவள் தந்தையை பார்த்து , எனக்கு விளங்கவில்லை. புரியும்படி கூறவும்.
சகிப்புத் தன்மையே மானுடத்தின் மேன்மை, குணம். உலகம் நமக்காக படைக்கப்பட்டதா அல்லது படைக்கப்பட்டதில் நாம் வாழ்கிறோமா ?
படைக்கப்பட்டதில் நாம் வாழ்கிறோம். ஆகையால் நமக்கு பிடிக்காத விஷயங்களில் இருந்து விலகி நிற்க வேண்டியதாகிறது, அப்படி நிற்பதனால் பலவீனம் அல்ல. எங்கு சகிப்பு தன்மை இல்லையோ, அங்கு அமைதி இருக்காது. அது வீட்டிற்க்கும் பொருந்தும், நாட்டிற்கும் பொருந்தும்.
அப்படினா ஒவ்வொரு மனிதனுக்கும் சகிப்புத்தன்மை அவசியமா என்ற கேள்வி உனக்குள் கண்மணி?
கண்டிப்பாக சகிப்புத்தன்மை அவசியம். மனித வாழ்வில் அனைத்து வகையிலும் ஆளுமை செலுத்துகின்ற ஆற்றல் உடைய குணாதிசயம் சகிப்புத்தன்மை. சகிப்புத்தன்மை இல்லை என்றால் நம் நிலை மாறிவிடும், அடுத்தவர்கள் உடுத்தும் உடை , நிறம், பேசும் மொழி பிடிக்க வில்லை என்றால் அவரை எதிர்க்க நேரிடும், இப்படி தினமும் சண்டை போட்டுக்கொண்டே போக வேண்டிய நிலை வரும். இதற்கு முடிவில்லாமல் போய் விடும், ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள நேரிடும். கடவுள் நமக்கு ஆறாவது அறிவில் சகிப்புத்தன்மையை அருளியது ஒன்றிணைந்து வாழ்வதற்க்கு. சமூகம் மகிழ்ச்சியாக இருந்தால், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அமைதியான சமூகத்திற்க்கு சகிப்புத்தன்மை வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒருவரிலிருந்து மாறுபட்டவர்கள். ஒருவன் மற்றொருவனை மதிக்க வேண்டும், அவனின் கலாச்சாரம், மொழி , சமூகம் , சுதந்திரத்தை மதித்து வாழ்வது சகிப்புத்தன்மை. சகிப்புத்தன்மை மற்றவர்களின் பழக்க வழக்கங்களை புரிந்து கொள்ளுதல், அவற்றை அங்கீகரிக்கவோ, பின்பற்றவோ வேண்டியதில்லை. மதிப்பு கொடுத்தல் போதுமானது.
உன் அம்மையின் சண்டைகளை நான் ரசித்து, சகித்து கொள்கிறேன் , நம் குடும்ப அமைதிக்காக,அவள் அதை புரிந்து கொள்வாள் என நம்புகிறேன், ஒரு நாள் மாறும்.இந்த கூற்றை புரிந்து வாழ், உன் வாழ்க்கை வசந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும். தந்தையான நான் உனக்கு சொத்துகளை விட சகிப்புத்தன்மையை கற்பித்தது பெரிய சொத்தாகும் .
கதை கருத்து;
சகிப்புத்தன்மை ஒரு வகையான ஞானம். சகிப்புத்தன்மை உள்ளவன்தான் உண்மையான வீரன்.
சகிப்புத்தன்மையே நமது பலம், பலவீனமல்ல. நாமும் வாழலாம் , மற்றவர்களையும் வாழ விடலாம். நான் நானாகவும், நீ நீயாகவும் இருப்பதும் மேன்மை அடையும்.அடுத்தவருக்கு மகிழ்வு வழங்கி, நமது சந்தோஷத்தையும் உறுதிபடுத்த சகிப்புத்தன்மை அவசியமாகிறது.
சகிப்புத்தன்மை அவசியம் , அது நம்மிடம் குறைவாக இருந்தால் , நிறைய கற்போம். சகிப்புத்தன்மை, சகோதரத்துவமே நமது அடையாளம்.