Jan 24, 2022
*கர்ணன்*
ஆதவன் அருளால் அவதரித்த, அற்புத புதல்வனே!
உன் அருமை அறியட்டும்,
இந்த உலகம்!
அறத்ததால் அரவனைத்தாய் அனைவரையும்,
அன்னை அன்பிற்கு ஏங்கினாய்,
துரியோதனின் பாசறையில் அகப்பட்டாய்,
பஞ்ச பாண்டவர்களின் அண்ணனே,
அர்ச்சுனனை வில்லில் எதிர்த்தவனே,
மாதவனின் மாய சூழ்ச்சிதனில்,
வீழ்ந்தாய் மண்மேலே,
இறுதியில் திருமாலே ஆசிர்வதித்தார்!!!