Jan 22, 2022
காதலனை பிரிந்து சென்று பார்க்க மறுக்கும் காதலியின் செவியில் படும்படியாக காதலனின் கவிதை இங்கே…
பார்த்தால் பற்றி கொள்ளுமென,
பறந்தாயோ பச்சைக்கிளி போல,
எந்தன் பச்சைமனம் பரஞ்சோதியாய்,
பயணிக்கும் உந்தன் பாதையில்,
பந்தலிட்டு புஷ்பங்கள் பளபளத்தால்,
பக்தனின் புகழை பாடடியோ,
பாதச் சதங்கை ஒலியாவது
சப்திக்குமா பரவசமாய் !!!