குரங்கு மனம் -4
“மனதை அறிவது”
கடந்த பாகத்தில் மனதை எப்படி கையாள்வது என்பதைப் பற்றி எழுதினேன். இந்த குரங்கு மனம் கட்டுரையை எழுதி முடிப்பதற்குள் என் மனம்அங்கும் இங்கும் தாவுகிறது . நானும் குரங்கு மனதுடன் சுற்று பேசிவிட்டு தான் பாகம்-1ஐ எழுத தொடங்கினேன்.
பாகம்-1ல் மனம் எங்கிருக்கிறது என்பதை விவாதித்தோம்.
தலையில் ? — இல்லை,
இதயத்தில் ? -இல்லை
மனம் காற்றை போன்றது; கண்ணால் காண முடியாது.
மனம் என்பது ஒரு பொருளோ அல்ல, அது உடலின் அருகில் உள்ள ஒரு சூட்சமம். எந்த குழந்தையும் மனதுடன் பிறப்பதில்லை, ஆனால் மூளையுடன் பிறக்கின்றது. மூளையின் வேலை சிந்திப்பபது, இதையே நாம் மனம் என்று சொல்கிறோம். ஆக மனம் என்பது மூளையின் செயல்பாடு மற்றும் மனம் எண்ணங்களின் கோர்வை.
நம் உடம்பு எங்கு இருக்கின்றது என்பதை விட, மனம் எங்கு இருக்கின்றது என்பதுதான் முக்கியம்.மனதின் வேகம் விமானத்தை விட அதிகம் அதனால்தான் அதை “வாயு வேக மனோ வேகம்” என்று குறிப்பிடுகிறார்கள்.
மனம் எங்கிருக்கிறது என்பதை தெரியவில்லை பின் எப்படி அறிவது?
உண்மையில் கடினம் இளைஞர்களை கேட்டுப்பாருங்கள் தான் காதலிக்கும் பெண் தன்னுடன் பழகும் போது அவர் தன்னை காதலிக்கிறாரா? அல்லது நட்புடன் பழகுகிறாரா? என்பதை அறிவது கடினம். பொதுவாக பெண்ணின் மனதை புரிந்து கொள்வது மிக கடினம் என்பார்கள். பெண்ணின் மனம் மட்டுமல்ல ,அனைவரது மனதை அறிவது கடினம் அது அவ்வளவு எளிதல்ல .
மனதை அறிவது என்பது அடுத்தவர் மனதில் உள்ளதை அறிவது மட்டுமல்ல, உங்கள் மனதை அறிய வேண்டும்,அது இரண்டும் ஒரு அதிசய ஆற்றல்.
ஒருவர் உங்களைப் பற்றி நினைக்கும் போது சில அறிகுறிகள் உருவாகும் அவை…..
1.உணர்வுகள் அலைவரிசையின் மூலம் அறிவது
2.விசித்திரமான உள் கோள்கள் உண்டாகும்
3.கண்களில் நமைச்சல்
4.உண்மையான காரணமின்றி என்று சிலர் உங்களிடம் பேசினால் / அணுகினால்
நீங்கள் பல நண்பர்களை வாழ்க்கையில் சந்திக்க நேரிடும்,பல சமயங்களில் அவர்கள் நம்பிக்கை ஆனவர்களா, இல்லையா என்பதை அவர்களிடம் பழகும் போது உங்கள் மனது அவர்களின் மனதை படிக்க தொடங்கிவிடும் .
மனமும் குணமும் அறிய உளவியல் தேர்வுகள் தேவையில்லை. அலையும் மனதை ஒருநிலைப்படுத்தினால் மனதை அறிய முடியும்.மனதின் எண்ணங்கள் தான் குணமாக வெளிப்படும்.
மனதை ஒருமுகப்படுத்துவது கடினம், ஒரு சில எளிய முறைகள்…….
கவனத்தை திசை திருப்பும் நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டு இருக்கிறது. அவற்றை கண்டு கொள்ளாமல் பணி புரிவது கடினம்.ஆனாலும் ஒருமுகப்படுத்துவது முடியாத ஒன்று இல்லை.
# எண்ணங்களை மனதில் போட்டு குழப்பாமல் இருங்கள்.
#பணியில் முழு கவனம் செலுத்துங்கள் தேவையின்றிக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள்
#நேரத்தை திறமையாகக் கையாளுங்கள்
#எதிர்மறை எண்ணங்களை தவிருங்கள்
#நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்
#நிதானத்தை கடைபிடியுங்கள்
#நேரத்திற்கு தூங்கி எழுந்து இருக்க பழகிக் கொள்ள வேண்டும்
மனதை ஒருமுகப்படுத்தினால் எப்போதும் புத்துணர்வுடன் இருக்க முடியும், சாதனைகள் பலவும் நிகழ்த்த முடியும்.
உங்கள் மனதை அறிந்து வாழ்க்கையை நெறிப்படுத்த மனதை ஒருமுகப்படுத்தி தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் மூலம் செயல்பட முடியும்.
இப்போது அடுத்தவர் மனங்களை எப்படி அறிவது, அடுத்தவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது மிக கடினம், பயிற்சி மற்றும் புத்திக் கூர்மையினாள் முயற்சித்தால் முடியும்
இன்றைய சூழ்நிலையில், பெற்றோர்கள் குழந்தைகள் மனதில் இருக்கும் பயங்களை அறியவேண்டும்.
சில எளிய வழிகள்…..
# உடல்மொழி
பிறர் மனதை படிப்பதற்கான அடிப்படை ஒன்று உடல்மொழி. கண் மற்றும் கை கால்கள் அசைவின் மூலம் அறியலாம்.
#குரலை பொருத்து
ஒருவரின் குரல் தோனி பொருத்து மனதை அறியலாம் சொற்களை பொறுத்தல்ல.
#நேரம்
நேரத்தை செலவிட்டால் ஒருவரை பற்றி அறிய முடியும் .
#நுண் வெளிப்பாடுகளின் மூலம் அறிய முடியும்
இந்த வழிமுறைகள் மூலம் நல்ல நண்பர்கள் மற்றும் உறவுகளை அறிய முடியும்.
நமது அனைத்து துன்பங்களும் மனதில்தானே உற்பத்தியாகின்றன, எனவே மனதை எப்படி சரியாக இயக்க வேண்டும் என்பதையும் அறிந்து செயல்பட வேண்டும்.
மனதை அறிந்து மனதில் சோர்வு ஏற்படாமல் மனதை திறமையாக நல்வினை களுக்கு பயன்படுத்தி வாழ்க்கையை நெறிப்படுத்துங்கள். அடுத்தவர் மனதை அறியும் திறமையை கற்று கண்டு, அவர்களுக்கு உதவ முற்படுங்கள் .
மீண்டும் உங்களை அடுத்த பாகத்தில் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.
நன்றி!!!
வணக்கம்!!!