கதை கேளு
சொல் திறன்
ஒரு அழகான நகரம், இயற்கை வளங்கள், நல்ல மக்கள் என நன்கு வாழ்ந்து வந்தார்கள். சில காலங்களாக மழை இல்லாததால் நகரம் வறண்டு இருந்தது மற்றும் நல்ல அரசாட்சி இல்லை. இப்படி ஒரு சூழலில் ஒரு முனிவர் அந்த நகரம் வந்தார், நகரத்தில் உள்ள மக்களின் பல குறைகளை அறிந்தார். ஆனால் அவர் ஒருவருக்கு மட்டும் தான் வரம் வழங்கும் சூழலில் இருந்தார் . அந்த முனிவர் ஆழ்ந்த சிந்தனையில் யாருக்கு வரம் வழங்கலாம் என யோசித்த போது ஒரு தம்பதி அவர் முன் வந்து குழந்தை வரம் கேட்டனர். அவர்களின் பக்தி நம்பிக்கையை கருதி அந்த முனிவர் வரத்தை இந்த தம்பதிக்க்கு வழங்கலாம் என தீர்மானித்து , அந்த தம்பதியிடம் நான் உங்களுக்கு வரம் அருள ஆண்டவன் அனுமதி பெற்றுவிட்டேன் , இந்த வரம் சில நிபந்தனைககளுடன் வழங்கப்படும் , உங்களுக்கு சம்மந்தமா? என முனிவர் கேட்க , அவர்கள் உடனடியாக எந்த நிபந்தனையாயின் பரவாயில்லை எங்களுக்கு குழந்தை பாக்கியம் இருந்தால் போதும் . முனிவர் வரத்தினை வழங்கி , நிபந்தனைகளை கூறினார் , உங்கள் புதல்வன் சொல்திறன் மிக்கவன் அவன் என்ன கூறினாலும் அது அவனுக்கு மற்றும் மற்றவருக்கும் நடக்கும். உதாரணமாக அவன் ஒருவரை பார்த்து உனக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என கூறினால் அந்த நபருக்கு செல்வங்கள் கிடைக்கும் மேலும் உன் மகனுக்கும் கிடைக்கும் , தவறாக கூறினாலும் அதும் பொருந்தும் , நீங்கள் இது அறிந்து உங்கள் புதல்வனை வளர்க்க வேண்டும் என கூறி அந்த முனிவர் மறைந்தார் .
அந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது, குழந்தையை பெற்றோர்கள் நன்கு வளர்த்தார்கள் , பெரியவனாகி அனைத்து நகர மக்களுடன் நன்கு பழகி சொற்பொழிவு ஆற்றி வந்தான் . அவன் சொல்திறனால் அந்த நகரம் மீண்டும் வளர்ச்சி அடைந்தது. அந்த இளைஞன் மீது பொறாமை கொண்ட ஒருவன் , எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று என முடிவு செய்து , அந்த இளைஞனை தகாத வார்த்தைகளால் திட்ட , இதனை சூதானித்து கொண்ட இளைஞன் இவர்க்கு ஏதோ மன உலைச்சல் நல்ல மருத்துவரிடம் ஆலோசிக்க சொல்ல்லாம் என கருதி , ஐயா , நீங்கள் உடனடியாக நேசமணி பொன்னையா என்ற வைத்தியரை பாருங்கள் என கூற , அந்த நபரோ கூச்சலிட்டவாறு , என்னை நாசமா நீ போனயா என்றும் பைத்தியத்தை பார் என்று சொல்கிறயா என பரப்புரை செய்தார் .
இப்படி சொல்திறனால் இளைஞனின் மரியாதையை கவிழ்த்து விடலாம் என்ற நினைத்தவர் உண்மையில் பைத்தியமாகி தன்னையே வறுத்திக் கொண்டார் . இளைஞனை ஒன்றும் பாதிக்கவில்லை ஏனெனில் அவர் நல்ல நோக்கத்துடன் தான் அறிவுரை வழங்கினார்.
கதை உட்கருத்து : சொல்திறனை கொண்டு அடுத்தவரை அழித்து விடலாம் என நினைத்தால் அழிவு நமக்கு தான் . ஆதலால் சொல்திறனை / வார்த்தை ஜாலத்தை நல்லதுக்கு பயன்படுத்துங்கள், அடுத்தவர் மனதை மற்றும் வாழ்க்கையை கெடுக்கவோ அல்ல .
நன்றி,
சங்கர் சுந்தரலிங்கம்