அறிவோம் அறிவியலை-மஞ்சள் மகத்துவம்
மஞ்சள் ஒரு தலைசிறந்த கிருமிநாசினி என்பதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். மஞ்சள் நம் இந்தியர்களின் வாழ்க்கையின் கலாச்சாரத்தில் ஒரு அங்கமாகிவிட்டது. பின்பு எதற்கு அனைவரும் அறிந்ததை பற்றி எழுதுகிறேன் என்ற கேள்வி உங்களுக்குள். ஆம், என்னது முந்தைய தொகுப்பான தேங்காய்,வாழைப்பழம் பற்றி நான் குறிப்பிட்டதை பலர் வியப்புடன் புதிய தகவல் என்றனர். சிலர் எனக்கு இதில் பெரும்பாலும் ஏற்கனவே அறிவேன் என்றனர். கண்டிப்பாக மஞ்சள் மகத்துவம் தொகுப்பில் நீங்கள் புதிதாக ஒன்றையாவதை அறிவியல் ரீதியாக தெரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதை எழுதுகிறேன்.
மஞ்சள் நம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விதமாக உபயோகிக்கின்றோம். மஞ்சள் நமக்கு கிடைத்த ஒரு வரம்,மூலிகை, உணவு மருந்து. மஞ்சள் ஒரு மங்கலப் பொருள்,மசாலாப் பொருள்,மூலிகைப் பொருள்,அழகுசாதனப் பொருள். இது இஞ்சி குடும்பத்தை சேர்ந்த ஒன்று. மஞ்சள் 2500 ஆண்டுகளுக்கு மேலானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது கிமு 500 முன்பே ஒரு மருந்தாக வெளிப்பட்டது. கிமு 700-ல் மஞ்சள் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பரவியது. மஞ்சளானது கிமு 800-ல் கிழக்கு ஆப்பிரிக்காவிலும் கிமு 1200-ல் மேற்கு ஆப்பிரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.13-ம் நூற்றாண்டில் அரேபியர்கள் இதனை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். ஒட்டுமொத்த உலகிற்கு 80% மஞ்சள் நம் நாட்டில் இருந்து தான் பயிரிடுகிறோம். மஞ்சள் நம் நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டது. இதை நிறமூட்டவும் , மருத்துவதற்க்கு பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. இன்று மஞ்சள் இல்லாத வீடு இல்லை.
மஞ்சள் எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதை சற்று பார்ப்போம்.
- சடங்குகளின் புனிதப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
- சமையலுக்கு நிறம் மற்றும் சுவை ஊட்ட பயன்படுத்தப்படுகிறது.
- மஞ்சள் கிழங்கு எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.
-நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
-மருந்தாக பயன்படுகிறது (அஜீரணம், சளி, மேற்பரப்பு காயங்கள், கல்லீரல், சருமம் , மூளைச்செயல் , இதயம், இரத்த உறைதலைத் தடுக்க )
-தேனீராகவும் பயன்படுகிறது
-பொங்கல் பண்டிகைகளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவது வழக்கம் .
- கோவில் திருவிழாக்களில் மஞ்சள் நீராட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.
-புத்தாடைகளில் மஞ்சள் தடவப்படுகிறது.
-மகளிர் முகம் தேய்த்து குளிக்க பயன்படுத்தப்படுகிறது/
-நறுமண பொருளாக பயன்படுத்தபடுகிறது
- புதிதாக ஒரு வீட்டில் குடிபுகுபவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை முன் வைத்து தான் சம்பிரதாயம் செய்கிறார்கள்.
- மஞ்சளை பிள்ளையாராக வழிபடுவர்.
-மஞ்சள் கிழங்கில் ஊறுகாய் செய்யப்படுகிறது.
மஞ்சள் வகைகள்
-கப்பு மஞ்சள்
-கறி மஞ்சள்
-மர மஞ்சள்
-விரலி மஞ்சள்
-கஸ்தூரி மஞ்சள்
என மஞ்சளில் பல வகைகள் உள்ளன.
மஞ்சளை ஏழைகளின் குங்கும பூ, தங்க மசாலா என்றெல்லாம் அழைக்கப்படுவதுண்டு. மஞ்சளில் விட்டமின் C ,B6,B2,B3 உள்ளது. மஞ்சளில் தாது உப்புக்களான இரும்புச்சத்து, மாங்கனீசு, செம்புச்சத்து ஆகியவை அதிகளவும், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகியவையும் காணப்படுகின்றன. மஞ்சளில் காணப்படும் தனித்துவமான குர்க்குமின் என்னும் பைட்டோ வேதிப் பொருட்கள் இதற்கு தனிப்பட்ட மணம், சுவை மற்றும் நிறத்தினை அளிக்கின்றன. மஞ்சளை அளவோடு உண்ண வேண்டும் .
நம்முடைய கலாசாரத்திலும், மருத்துவத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது மஞ்சள். இதன் பெருமையை உணர்ந்து மேலை நாட்டினரும் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மருத்துவத் தன்மை உறுதியான பிறகு மஞ்சளுக்கான காப்புரிமையையும் அமெரிக்கா பெற்று வைத்துள்ளது. காப்புரிமை பெற்றவர்கள் அயல்நாட்டுக்காரர்களாக இருக்கலாம் , அதன் மகத்துவத்தை தெரிந்தவர்கள் நாம். மஞ்சளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அறிந்தவர்கள் நாம், மஞ்சள் நம் அன்றாட வாழ்க்கை முறையில் கலந்துள்ளது.மஞ்சள் இருக்க அஞ்சேல் !